உள்ளூர் செய்திகள்

சிபிஎஸ்இ பள்ளிகளிலும் மராத்தி கட்டாயமாகிறது!

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பாடமுறை பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை மராத்தி மொழிப் பாடத்தை இரண்டாவது பாடமாக கற்பிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பாடமுறை பள்ளிகளுக்கான குறிப்பாக நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கான 20 அம்ச கொள்கைத் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. கல்லூரி மாணவர் சேர்க்கையின்போது, மாநில போர்டு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை உணர்ந்தது. இப்பிரச்சினை குறித்து சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்பட்டது. அதையடுத்து இந்தப் பள்ளிகளுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்