உள்ளூர் செய்திகள்

மருத்துவ ஆராய்ச்சி பல்கலை ஒப்பந்தம்

சென்னை; தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.தமிழகத்தில், சித்தா, ஓமியோபதி துறையின் கூட்டு மருந்து சிகிச்சையில், கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைந்தனர். சித்தா சிகிச்சையால், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனரகம் இடையே, பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், பல்கலையின் பதிவாளர் அஸ்வந் நாராயணன் கையெழுத்திட்டனர். பல்கலை துணை வேந்தர் சுதா சேஷய்யன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்