கிளினிக்கல் ரிசர்ச்சில் பி.ஜி., டிப்ளமோ
தற்போது இந்தியாவில் கிளினிக்கல் ரிசர்ச் நிபுணர்களின் தேவை 10 ஆயிரமாக உள்ளது. இது வரும் 2013ம் ஆண்டு 50 ஆயிரமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் லைப் சயின்ஸ் மற்றும் பயோ சயின்ஸ் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும். கிளினிக்கல் ரிசர்ச் ஆப்பரேஷன், டேட்டா மேனேஜ்மென்ட், மெடிக்கல் ரைட்டிங், ரெகுலேட்டரி அபயர், பார்மகோ விஜிலன்ஸ், குவாலிட்டி அஷூரன்ஸ், லேபாரட்டரி டெக்னீஷியன்ஸ், பிசினஸ் டெவலப்மென்ட், ஸ்டாடிஸ் டிஷியன் ஆகிய பொறுப்புகளில் கிளனிக்கல் ரிசர்ச் நிபுணர்கள் பணியாற்ற முடியும். இதற்காக ‘கிளினிக்கல் ரிசர்ச் எஜுகேஷன் அண்டு மேனேஜ்மென்ட் அகாடமி’ புதிய முதுநிலை டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் உயிர் அறிவியல் பாடங்களில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் சேர முடியும். இந்த படிப்புக்கான காலம் ஒரு ஆண்டு. இதில் கிளினிக்கல் ரிசர்ச்சின் அடிப்படை பாடங்களுடன், மருந்து பொருட்களின் பாதுகாப்பு, திறன், தரக்கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் கற்றுத்தரப்படுகிறது. அத்துடன் ஆர்கனைசேஷன் பிகேவியர், பைனான்ஸ், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ் மென்ட், அவுட்சோர்சிங் மென்டார் மேனேஜ்மென்ட் போன்ற பாடங்களுடன் மேலாண்மை மற்றும் மென்திறன்கள் அதிகரிப்பது குறித்தும் இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. இந்த படிப்புக்கான கட்டணமாக 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. படித்து முடித்தவுடன் தொடக்க சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.