அரசுப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, உடனடியாக மாணவியர் வெளியேற்றப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோவை ராஜவீதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரனுக்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு போன் செய்த ஒருவர், உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் வெடிக்கும் எனக் கூறி துண்டித்தார். இதனால் பதட்டம் அடைந்த தலைமை ஆசிரியர், உடனடியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து வகுப்பறைகளில் இருந்த மாணவியரை உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றினார். போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு பாம் ஸ்குவாடு போலீசார் விரைந்து வந்து மோப்ப நாய் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. யாரோ விஷமிகளால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் பள்ளி ஆசிரியர்களும் மாணவியரும் சமாதானம் அடைந்தனர். வெடிகுண்டு மிரட்டல் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் கூறுகையில், போனில் இருந்து எனது மொபைல் போனுக்கு அந்த நபர் பேசினார். குரலை மாற்றி பேசினார். எனது மொபைல் எண் எப்படி கிடைத்தது என தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர், என்றார். 2.45 மணி அனானிமஸ். ஒரு மணி நேரத்தில் குண்டு வெடிக்கும் போன் துண்டிப்பு. செல் போனுக்கு. ஸ்டேஷன் பாம் குவாடு, ஒன்ணும் இல்லை. அரை மணியும் சென்ட். சி.இ.ஓ., தகவல். ஆண் குரல். வாய்ஸ் மாற்றி பேச்சு லேண்ட் லைன்