உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலைகழத்திற்கு உட்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை துணை வேந்தரிடம் மனுக்கள் மூலம் எடுத்துரைத்தனர்.துணை வேந்தர் திருவாசகம் ஒவ்வொரு மாணவரிடமும் தனித் தனியாக குறைகளை கேட்டறிந்தார்.இந்நிகழ்ச்சியில், துணைவேந்தர் திருவாசகம் பேசியது இந்த மாதம் குறை தீர்க்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். வரும் மாதம் முதல் திங்கட்கிழமைகளில் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடக்கும். மாணவர்கள் கொடுக்கும் மனுவின் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவரங்களை, மாணவர்கள் சென்னைப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு திருவாசகம் கூறினார்.இந்த நிகழ்ச்சியில், திரளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை துணை வேந்தரிடம் தெரிவித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்