சென்னை பல்கலை ரிசல்ட் வெளியீடு
சென்னை: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், ஜூனில் நடத்த வேண்டிய செமஸ்டர் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக, நவம்பரில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.தேர்வர்கள் தங்கள் பதிவெண்ணை பயன்படுத்தி, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், மதிப்பெண்ணை அறியலாம்.