உள்ளூர் செய்திகள்

மகளிர் சுயதொழில் பயிற்சி கருத்தரங்கு

மதுரை மதுரையில் இ.டி.ஐ., மற்றும் பெட்கிராட் இலவச சுயதொழில் பயிற்சி மையம் சார்பில் பெண்களுக்கான இலவச சுயதொழில் பயிற்சி கருத்தரங்கு நடந்தது.நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார். முருங்கை பவுடர், மசால் பொடி, உடனடி இட்லி பொடி உள்ளிட்ட பொடிகள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் ஜெயா பேசுகையில் "குறைந்த முதலீட்டில் தொழில் துவங்கி தொழில் முனைவோராக மாற பல்வேறு திட்டங்கள் சலுகைகள் உள்ளன. படித்தவர், படிக்காதவர் அனைவருமே தொழில் துவங்கி பயனடையலாம்" என்றார்.இ.டி.ஐ., திட்ட அலுவலர் திருப்பதி, பஞ்சாப் நேஷனல் வங்கி பொன்மேனி கிளை மேலாளர் ேஷாபனா, துணை மேலாளர் தங்கமலர், பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்