இந்தியா வந்தார் ஆஸ்திரேலியா பிரதமர்
ஆஸி பிரதமர் கெவின் ரூட், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச இருப்பதாகவும் இந்த சந்திப்பில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார். நவம்பர் 13ம் தேதி மும்பையில் நடக்க இருக்கும் வர்த்தக பிரதிநிதிகள் கூட்டத்தில் ரூட் கலந்து கொள்கிறார்.