அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடை பெற்று வருகிறது.அரசு இசைப்பள்ளியில் குரலிசை (வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், தவில்,நாதசுரம்,தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகிய பிரிவுகளில் வகுப்பு நடை பெற்று வருகின்றன. 2021-22ல் சேர்வதற்கு 12 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம். தவில், நாதசுரம் பிரிவில் சேர்த்துக்கொள்ள கல்வி தகுதிகள் இல்லை. மற்ற பிரிவுகளுக்கு 7 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் ஆண்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.3 ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு 152 ரூபாய் செலுத்த வேண்டும். இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகையாக மாதம் 400 ரூபாய், அரசு மாணவர் விடுதி அளிக்கப்படும். இசைக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, 47, சத்தியமூர்த்தி தெரு, சிவகங்கை, என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி 04575 240021.