உள்ளூர் செய்திகள்

குளிரைப் பொருட்படுத்தாமல் குவிந்த மாணவர்கள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற, ஆலோசனைகளை அளிக்கும் ஜெயித்துக் காட்டுவோம் என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை தினமலர் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. சென்னை மாநகராட்சி மாணவர்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சி, நவம்பர் 25ம் தேதி, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் துவங்கியது. அன்று, பல்லாயிரக்கணக்கான 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இரண்டாவது நாளான நவம்பர் 26ம் தேதி, மாநகராட்சிப் பள்ளி, பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. சென்னையின் பல பகுதிகளில் இருந்து, 27 மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கடும் குளிரிலும், காலை 6.30 மணி முதலே மாணவர்கள் அரங்கின் முன் குவிந்தனர். கூட்டம் அலை மோதியதால், 8 மணிக்கே அவர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர் களுக்கு, தேர்வில் வரும் முக்கிய வினாக்கள், எந்தெந்த பாடத்தில் எவ்வளவு மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்ற தகவல்கள் அடங்கிய, புளூ பிரின்ட் புத்தகம், உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த புத்தகம், மாணவிகளுக்கான, ஹெல்த் ஸ்பெஷல் புத்தகம் மற்றும் தன்னம்பிக்கை உணர்வை ஊட்டும் ஜெயித்துக் காட்டுவோம் புத்தகம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலியுடன், 8.45 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. காலை 9 மணி முதல் 1.25 மணி வரை அறிவியல் பிரிவு மாணவர் களுக்கு நிகழ்ச்சி நடந்தது. திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் கோபி ஆனந்தன், பாலசுப்ரமணியன், பத்மநாபன், சேகர் மற்றும் ரமேஷ் ஆகியோர், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினர். மதியம் 2 மணி முதல், மாலை 5.15 மணி வரை, கலைப்பிரிவு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள் சீனிவாசன், ஸ்ரீராமன், ரவி, ரமேஷ் மற்றும் பத்மநாபன் ஆகியோர், தேர்வு குறித்த ஆலோசனைகளை தந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்