உள்ளூர் செய்திகள்

இலங்கை ஆசிரியரின் சைக்கிள் பயணம்

மதுரை: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிளில் மதுரை வந்த இலங்கை வவுனியா பகுதி பிரதாபன் தர்மலிங்கத்துக்கு, மாசிவீதி வியாபாரிகள் வரவேற்பு அளித்தனர்.சென்னை மெரினா கடற்கரையில் இருந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரதாபன் தர்மலிங்கம் மூவாயிரம் கி.மீ., சைக்கிள் பயணத்தை ஜூலை 23 ல் தொடங்கினார். இவர் இலங்கையில் பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் இவர், புவி வெப்பமயமாவதை தடுப்பது, மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று ஆக. 6 காலை மதுரை வந்தார்.மதுரை வியாபாரி திருமுருகன் பாண்டியன் கூறுகையில், இலங்கையில் இருந்து தமிழகம் வந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவரை மாலை அணிவித்து வரவேற்றோம். இவரது பயணத்திற்கு தேவையான உதவிகளை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியினர் செய்தனர். இப்பகுதியில் சில மரக்கன்றுகளை நட்டார். விருதுநகர் வழியாக கன்னியாகுமரி சென்று பயணத்தை முடிப்பார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்