ஆசிரியர் பற்றாக்குறை: பெற்றோர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: சின்னாளபட்டியில் இயங்கி வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரிசெய்யக்கோரி மாணவர்களின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் அடுத்த காந்திகிராமம் பல்கலையில் கேந்திர வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இங்கு, திண்டுக்கல், வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் கல்வி தரம் குறைந்து வருவதாகவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.