நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குனர் அசோக் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளை வேளாண்மையில் ஈடுபடுத்தி, பயிர் சாகுபடியில் ரசாயனத்தின் பயன்பாட்டை குறைத்து, மண்வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க ஊக்குவிக்கப்படுகிறது. வேளாண்மை துறையால் நம்மாழ்வார் விருது வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண்மையில் சிறந்து விளங்கி, சக விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு, நம்மாழ்வார் விருது வழங்கப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், அக்ரிஸ்நெட் வலைதளத்தில், வரும் நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.முதல் பரிசு 2.5 லட்சம் ரூபாயும், 10,000 ரூபாய் மதிப்புடைய பதக்கமும், இரண்டாம் பரிசு 1.5 லட்சம் ரூபாயும், 7,000 ரூபாய் மதிப்புடைய பதக்கமும், மூன்றாம் பரிசு 1 லட்சம் ரூபாயும், 5,000 ரூபாய் மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.