உள்ளூர் செய்திகள்

இடமாறுதல் கலந்தாய்வு வி.ஏ.ஓ.,க்கள் எதிர்ப்பு

சென்னை: முன்னுரிமை பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பின், கலந்தாய்வு நடத்த வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு, சங்க நிர்வாகிகள் அனுப்பியுள்ள மனு:சென்னை மாவட்டத்தில், தெற்கு வருவாய் கோட்டத்தில் இந்த வாரம், வி.ஏ.ஓ.,க்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடக்க உள்ளது. முன்னுரிமை பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. அவற்றை சரி செய்த பின்னரே, கலந்தாய்வு நடத்த வேண்டும். ஒருவர் வி.ஏ.ஓ., பதவியில் இருந்து உயர் பதவிக்கு சென்று, மீண்டும் வி.ஏ.ஓ., பதவிக்கு வந்தால், அவரை முன்னுரிமை பட்டியலில், கடைசியாக வைக்க வேண்டும். எனவே, கலந்தாய்வை ஒத்திவைத்து, அதற்கு முன்பாக முன்னுரிமை பட்டியலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்