உள்ளூர் செய்திகள்

தமிழ்மொழி இலக்கியம் திறனறித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: அக்.,10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.,10ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், 50 சதவீதம் அரசுப்பள்ளி உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும்தேர்வு செய்யப்படுவார்கள்.தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2023-24 கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் அக்.,10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இம்மாதம் 5ம் தேதி முதல் 20ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம்/முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்