தேசிய ஆசிரியர் சங்கத்திற்கு பாராட்டு
ராஜபாளையம்: தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு சேவைக்காக தேசிய ஆசிரியர் சங்கத்திற்கு மாவட்ட கலெக்டர் விருது வழங்கியுள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு இச் சேவைகளில் ஈடுபடுவோருக்கு கலெக்டர் சார்பில் பாராட்டு சான்று வழங்கி ஊக்கப்படுத்துவது வழக்கம். தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்ததை முன்னிட்டு கலெக்டர் ஜெயசீலன் சேவைகளை பாராட்டி சங்க மாவட்ட மகளிர் அணி செயலாளர் குணவதியிடம் சான்றிதழ் வழங்கினார். சாதனைக்கு பங்களித்த உறுப்பினர்களுக்கு சங்க மாவட்ட தலைவர் சரவணச் செல்வன் நன்றி தெரிவித்துள்ளார்.