உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் சேவை

சென்னை: அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில், பிராட்பேண்ட் இணைய சேவையை நிறுவிக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வியின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு வீடியோ வழியில் பாடங்கள் நடத்தவும், நீட் பயிற்சி வழங்கவும், ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி பயிற்சி அளிக்கவும், ஆன்லைன் கூட்டம் நடத்தவும், ஹைடெக் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.அவற்றிற்கு தேவையான இணையதள இணைப்பை, அந்தந்த பள்ளிகள் தரப்பில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், ஒவ்வொரு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியிலும், 1,500 ரூபாய் கட்டணத்தில், அரசின் செலவில், பிராட்பேண்ட் சேவையை நிறுவ, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்