கல்வித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
தேனி: மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் பள்ளிகளில் பயிலும் 3,093 தமிழக மாணவர்களுகு உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற பெற்றோர் உச்ச வருமான வரம்பு ரூ.2.5 லட்சமாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் டிச.,31 கடைசிநாள், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க -2024 ஜன.,15 கடைசி நாளாகும். விவரங்களுக்கு https://Scholarships.gov.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளாலாம்.