உள்ளூர் செய்திகள்

பெற்றோரை பாராட்ட பள்ளிக்கல்வி விழா

சென்னை: பெற்றோரை கொண்டாடுவோம் என்ற பெயரில், மாணவர்களின் பெற்றோரை பாராட்டும் வகையில், பள்ளிகளில் விழா நடத்த கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.இதற்கான துவக்க நிகழ்ச்சி மதுரையில் வரும், 29ம் தேதி நடக்கிறது. இதில், பள்ளிக்கல்வி அமைச்சர், அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்களின் பெற்றோர் பங்கேற்க உள்ளனர்.இதையடுத்து, ஏழு கட்டங்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும், பெற்றோரை அழைத்து கவுரவித்து, விழாக்கள் நடத்த உள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விழாக்களின் வழியே, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நன்கொடை பெறவும், பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்