உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு டாக்டர்களுக்கு தற்காலிக பதிவு

சென்னை: இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்கும் இந்தியர்கள், பல்வேறு மாநிலங்களில் மருத்துவ சேவையாற்ற, சம்பந்தப்பட்ட மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம். அதன்படி, இந்தியாவில், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்த டாக்டர்கள் உள்ளனர்.இந்நிலையில், வெளிநாட்டு குடிமக்களாக உள்ள டாக்டர்கள், இந்தியாவுக்கு உயர் மருத்துவ படிப்புக்கு வரவும், மருத்துவ நுட்பங்களை பகிரவும்; மருத்துவ சேவையாற்றவும் தற்காலிக பதிவு அவசியம் என, ஆணையத்தின் மருத்துவ பதிவு வாரிய உறுப்பினர் விஜயலட்சுமி நாக், வழிக்காட்டுதல் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்