உள்ளூர் செய்திகள்

நாளை ஹால் டிக்கெட் கிடைக்கும்

சென்னை: தனித் தேர்வர்களுக்கான பத்தாம் வகுப்பு பொதுட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் பிப்.,24 பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்கள் அதிகாரப்பூரவ இணையதளத்தில் விண்ணப்ப எண், பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்