மதுரையில் உலக வங்கிக்குழு ஆய்வு
மதுரை: தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக மகளிர் தொழில் முனைவை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல், பிறதொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. மதுரை மாவட்டத்தில் இத்திட்டம் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலுார், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் 137 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்ட செயல்பாடுகளை உலக வங்கிக் குழுவினர்கள், மாநில அலுவலர்கள், இத்திட்டத்தால் உருவான உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், சமுதாய திறன் பள்ளிகள், பண்ணை பள்ளிகள், இணை மானிய நிதி திட்டம் மூலம் பயன்பெற்றோரை நேரடியாக ஆய்வு செய்தனர். அவர்களுடன் கலந்துரையாடினர்.உலக வங்கிக் குழுவைச் சேர்ந்த சோவிக், ராம், மதுஸ்ரீ, அக்கன் சிட்டா, தர்ஷன், திட்ட அலுவலர்கள் பாபு, ராஜேஷ், மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.