உள்ளூர் செய்திகள்

ஆறு பல்கலைகளுக்கு யு.ஜி.சி., நோட்டீஸ்

அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளிலும், மாணவ - மாணவியரின் பாதுகாப்பு, அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் வகையில், குறைதீர்ப்பு மையம் அல்லது குறை தீர்ப்பாயம் அமைக்க வேண்டியது கட்டாயம் என, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை, ஓராண்டுக்கும் மேலாக பின்பற்றாத தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை, பாரதிதாசன், திருவள்ளுவர் பல்கலைகள், தமிழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை, தமிழ் பல்கலை, தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை ஆகியவற்றுக்கு, யு.ஜி.சி., சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்