ஊட்டியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இயங்கி வரும் இரு பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இரண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளித்ததின் பேரில் பள்ளிகளில் மோப்பநாய் மற்றும் 3 வெடிகுண்டு நிபுணர் குழுவினர்கள் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.