உள்ளூர் செய்திகள்

பிஎச்.டி., உதவித்தொகை

சிங்கப்பூரில் பிஎச்.டி., படிப்பைத் தொடர விரும்பும் சர்வதேச மாணவர்கள் சிங்கா உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கான ஏஜென்சி- ஏ*ஸ்டார், சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் - எஸ்.யூ.டி.டி.,, நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் -என்.டி.யூ, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் - என்.யூ.எஸ்., சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் - எஸ்.எம்.யூ., ஆகியவை இந்த உதவித்தொகையை வழங்குகின்றன. துறைகள்: பயோமெடிக்கல் சயின்சஸ், கம்ப்யூட்டிங் அண்டு இன்பர்மேஷன் சயின்சஸ், இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, பிசிக்கல் சயின்சஸ்.உதவித்தொகை விபரம்: முழு கல்விக்கட்டணம், மாதாந்திர உதவித்தொகை 2,700 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படுகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு 3,200 சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்படுகிறது. ஒருமுறை விமானக் கட்டணமாக 1,500 சிங்கப்பூர் டாலர் மற்றும் இதர செலவினங்களுக்காக ஒருமுறை 1000 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படுகிறது. இவைதவிர, உணவு மற்றும் உள்ளூர் போக்குவரத்து செலவினங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கால அளவு: 4 ஆண்டுகள்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டம் மற்றும் உரிய ஆங்கில புலமையை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 1விபரங்களுக்கு: www.a-star.edu.sg


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்