நீரழிவு துறையில் ஆராய்ச்சி படிப்பு
நீரழிவு துறையில் 'போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப்'பிற்கான சேர்க்கை அறிவிப்பை, தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.படிப்பு: போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப் இன் டயபெட்டாலஜி - ஓர் ஆண்டுதகுதிகள்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக இருத்தல் அவசியம். தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ளாதவர்கள் 'நேட்டிவிட்டி' சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான பல்கலைக்கழகத்தில் எம்.டி., படிப்பை நிறைவு செய்தவராகவும் இருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.2,500. எஸ்.சி., / எஸ்.சி.ஏ., / எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 16, 2024விபரங்களுக்கு: https://tnmedicalselection.net/