உள்ளூர் செய்திகள்

சைகை மொழி விழிப்புணர்வு

ராயபுரம்: செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் பயன்படுத்தும் சைகை மொழியை பயன்படுத்துவது குறித்த பயிலரங்கம், ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடந்தது.ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில், சர்வதேச சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் வாரம் அனுசரிக்கப்பட்டது. செவித்திறன் குறைபாடுள்ளோருடன் தொடர்பு கொள்வதற்கு சைகை மொழியின் முக்கியத்துவம், காது கேளாமை தடுப்பு மற்றும் சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஒலியியல் வல்லுனர் முத்துசெல்வி சைகை மொழி முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து பேசினார். காது பாதுகாப்பு சாதனங்களின் பயன்பாடு குறித்த செயல்விளக்கம் மற்றும் கருவிகளின் கண்காட்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்