உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டில் பிஎச்.டி படிக்க உதவித்தொகை

வெளிநாடு சென்று முதுகலை மற்றும் பிஎச்.டி படிக்க மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது.மத்திய அரசின் கீழ் இயங்கும் நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையானது தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தின் கீழ் குறைந்த குடும்ப வருமானம் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பாரம்பரிய கைவினைஞர்கள் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள். வெளிநாட்டிற்குச் சென்று முதுகலை மற்றும் பிஎச்.டி படிக்க விருப்பமுள்ள தகுதியுள்ள மாணவர்கள் www.nosmsje.gov.in என்ற போர்ட்டல் வாயிலாக அக்.,15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்