பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு
திருவாடானை: தொண்டி அருகே காரங்காட்டில் அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலைப்பள்ளிக்கு காரங்காடு சுற்றுலா மைய நிதியில் இருந்து ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது. வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது:மாணவர்களின் தேடலுக்கும், கற்பிக்கும் திறனை மேம்படுத்தவும் ஸ்மார்ட் போர்டு பயனுள்ளதாக இருக்கும். ஆகவே காரங்காடு சுற்றுலா மைய நிதியிலிருந்து மாணவர்கள் பயனடையும் வகையில் ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது என்றனர்.நிகழ்ச்சியில் காரங்காடு சூழல் மேம்பாட்டுக் குழு, வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு கூறினார்.