அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு
அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் சற்று குறையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்த நவம்பர் மாத நிலவரப்படி வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.கடந்த அக்டோபர் மாதத்தில் 7.8 மில்லியனாக இருந்த வேலை வாய்ப்புகள், நவம்பரில் 8.1 மில்லியனாக உயர்ந்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. பணிநீக்கங்கள் சற்று அதிகரித்ததும், வேலையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததுமான சூழல் நவம்பரில் நிலவின. இது, அமெரிக்கர்கள் வேறு இடங்களில் சிறந்த வேலைகளைக் கண்டுபிடிப்பதில் குறைந்த நம்பிக்கையுடன் இருப்பதை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் கடந்த மாதம் 1,57,000 புதிய வேலைகளை சேர்த்துள்ள நிலையில், வேலையின்மை விகிதம் 4.2 சதவீதத்திற்கு குறையும் என்று கருதப்படுகிறது.