வாட்ஸ் ஆப்பில் வகுப்பு மேலாண்மை
கோவை : வரும் ஜூன் 2ம் தேதி, கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள், வாட்ஸ் ஆப் குழுவில் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அதனடிப்படையில், பள்ளி திறக்கும் நாளில், மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என, ஆசிரியர்கள் மாணவர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.ஆசிரியர்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித்தனி வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள், வகுப்பு தொடர்பான தகவல்கள், புத்தகங்கள், இலவச சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும், விவரங்கள் பகிரப்பட்டு வருகின்றன என்றனர்.