கொளஞ்சியப்பர் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், அரசு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை துவங்குகிறது.புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய மக்கள் தொடர்பகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கள அலுவலகம் சார்பில் அரசு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாளை (21ம் தேதி) மற்றும் 22ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியல் நடக்கிறது.புதுச்சேரி மண்டல இயக்குனர் காமராஜ் தலைமை தாங்குகிறார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காலை 10:30 மணிக்கு துவக்கி வைக்கிறார்.அஞ்சல் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட சமூக நலன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகள் மற்றும் வருவாய், ஊரக வளர்ச்சித்துறை ஆகியன சார்பில் விழிப்புணர்வு கண்காட்சிகள், பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.