மாவட்ட செஸ் திருவள்ளூர் அசத்தல்
சென்னை: மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், திருவள்ளூர் சிறுவர் - சிறுமியர் வெற்றி பெற்று அசத்தினர்.திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, திருநின்றவூரில் உள்ள பாரத் செஸ் அகாடமியில் நேற்று முன் தினம் துவங்கி, நேற்று நிறைவடைந்தது.இதில், 15 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட இருபாலரிலும், தனித்தனியாக போட்டிகள் நடந்தன. போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 170 மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.சிறுவர்களுக்கான 15 வயது பிரிவில், பிரஜுஷ், ராகவபிரபாகரன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களையும், சிறுமியரில் ஹர்ஷிதா, வைஷ்ணவி முதல் இரண்டு இடங்களையும் கைப்பற்றினர்.அதே போல், 19 வயது பிரிவில், சிறுவரில் வெங்கடேஷ் கிருஷ்ணா, சூரியா ஆகியோரும், சிறுமியரில் லக் ஷனா, ரித்திகா ஆகியோரும் முறையே, முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். இவர்கள் அனைவரும், மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.