உள்ளூர் செய்திகள்

மாயாகுளம் பள்ளி ஆண்டு விழா

கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் என்.எம்.எஸ்., சேர்மத்தாய் வாசன் நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளியின் கல்விக் குழு தலைவர் பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எம்.எஸ்., பள்ளிகளின் செயலாளர் மோகன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுகிபாலின் ஆண்டறிக்கை வாசித்தார். நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், ஆடிட்டர் சுந்தர்ராஜன் பேசினர்.மதுரை நாடார் மகாஜன சங்கத் தலைவர் குருசாமி வெள்ளையன், பொருளாளர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் அசோகன், செயலாளர் மாரிமுத்து, கீழக்கரை மணிகண்டன் உட்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் சூரிய மூர்த்தி நன்றி கூறினார். ஆசிரியர் ஜெய்சங்கர் தொகுத்து வழங்கினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்