ராணுவக் கல்லுாரியில் படிக்க விண்ணப்பிக்கலாம்
தேனி: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி உள்ளது. இங்கு 2027 ஜனவரிக்கான 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் 2014 ஜன., 2 முதல் 2015 ஜூலை 1க்குள் பிறந்திருக்க வேண்டும். 7ம் வகுப்பு படிக்கும் அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்த இரு விண்ணப்பத்தை 'தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையச்சாலை, பூங்காநகர், சென்னை - 600 003' என்ற முகவரிக்கு ஏப்., 5 மாலை 05:45 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு www.rimc.gov.in என்ற இணைய தளம் அல்லது தேனி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை 04546 293 383 என்ற தொலைபேசியில் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.