உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நான்காம் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் லிட்டி கொரியா தலைமை வகித்தார். திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் சுமதி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.கடந்த, 2022 - 25ம் ஆண்டு பயின்ற, 259 மாணவர்களுக்கும், 2021 - 24ல் படித்த, 10 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.பட்டம் பெறுபவர்களில் பாடவாரியாக, ஆங்கிலத்துறை, 55, கணிதத்துறை, 35, வணிக நிர்வாகவியல் துறை, 52, கணினி பயன்பாட்டியல் துறை, 56, தொழில்சார் கணக்கியல் துறை, 61 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் உறுதி மொழி கூற பட்டம் பெற்ற மாணவர்கள், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கல்லுாரியின் பல்வேறு தலைவர்கள், பேராசிரியர்கள், நிதியாளர், கண்காணிப்பாளர், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்