உள்ளூர் செய்திகள்

சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பயிற்சி கல்லுாரி மற்றும் பச்சையப்பா பெண்கள் கல்லுாரியில், இணையவழி குற்றங்கள் தடுப்பு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பயிற்சி கல்லுாரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் ஓவிரெட்டி, தலைமை காவலர்கள் சதீஷ்குமார், கவியரசு, முத்துலட்சுமி ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதேபோல, பச்சையப்பா பெண்கள் கல்லுாரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் இணையப் பாதுகாப்பின் அவசியம், ஆன்லைன் பணமோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகள் மற்றும் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து, சப் இன்ஸ்பெக்டர் ஓவிரெட்டி, தலைமை காவலர்கள் கவியரசு, முத்துலட்சுமி ஆகியோர் மாணவ மாணவியருக்கு விளக்கமளித்தனர்.இவ்விரு விழிப்புணர்வு முகாம்களிலும் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்