ஜப்பான் நிறுவனத்தில் பயிற்சி வாய்ப்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள ஹிடாச்சி நிறுவனம், பொறியியலில் பி.இ. அல்லது பி.எஸ்சி. படித்தவர்களை தொழில்நுட்ப பயிற்சிக்கு அழைக்கிறது. தொழிற்சாலை சிஸ்டம், போக்குவரத்து சிஸ்டம், பவர் சிஸ்டம், தகவல்தொடர்பு மற்றும் தொலைதொடர்பு சிஸ்டம், சூழ்நிலை சம்பந்தமான மற்றும் ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேற்கூறிய துறைகளில் ஏற்கனவே நடைமுறை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு, திரும்பி வருவதற்காக எகனாமிக் வகுப்பு விமான டிக்கட் வழங்கப்படும். மேலும் பயிற்சியின்போது தங்குமிடம், உணவு மற்றும் ஜப்பான் நாட்டிற்குள் பயணம் செய்வதற்கான செலவு போன்ற அனைத்து செலவுகளும் பயிற்சி ஏற்பாட்டாளர்களால் கவனித்துக் கொள்ளப்படும். இப்பயிற்சிக்கான விண்ணப்பத்தை ரூ.5 செலுத்தி, த ஹிந்து பத்திரிக்கையின் பலதரப்பட்ட அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் செய்பவர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக்கூடாது. விண்ணப்பிக்கும் கடைசி தேதி டிசம்பர் 31. இதைப்பற்றி மேலும் விவரம் அறிய www.career360.com என்ற வலைதளத்திற்கு செல்லவும்.