உள்ளூர் செய்திகள்

தனியார் பங்களிப்பை எதிர்க்கும் கேரளா

கல்வித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முடிவை கேரள அரசு கடுமையாக எதிர்க்கும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவிற்கு மாற்றாக, கல்வித்துறையில், ஐ.எச்.ஆர்.டி. மற்றும் கூட்டுறவு துறைகளுடன் இணைந்து செயல்படும் திட்டத்தை மாநில அரசு முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், சார்ந்திருப்பவர்களின் உறவினர்களையே நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதைப்பற்றிய இறுதி முடிவு, வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் எடுக்கப்படும் என்றும் கூறினார். இதைத்தவிர, கடந்த 1998 ஆம் ஆண்டிற்கு பின்னர் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத துறையில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், நிச்சயம் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்றும் உறுதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்