உள்ளூர் செய்திகள்

இந்திய மாணவர்களுக்கு வலைவீசும் கனடா

இந்திய மாணவர்களை பெருமளவில் ஈர்ப்பதற்கு, கனடா நாட்டு பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டுகின்றன. கனடாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அசோசியேஷனின் தலைவர் பால் டேவிட்சன் இதுகுறித்து கூறுகையில், "எங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இந்தியா குறித்த ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளது. இந்திய மாணவகளை இழுப்பதில் அவை போட்டி போடுகின்றன. தற்போது 2 கனடிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களின் வளாகங்களை அமைத்துள்ள நிலையில், பல பல்கலைகள், இந்திய கல்வி நிறுவனங்களுடன் கூட்டிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன. சமீபத்தில் எனது தலைமையில், 15 பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் அடங்கிய ஒரு கல்வித் தூதுக் குழு இந்தியா வந்ததன் நோக்கம், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கனடா வந்தபோது இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தான கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது, இந்திய மாணவர்களுக்கு கனடா பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மாணவர் பரிமாற்ற வாய்ப்புகளை ஆராய்வது மற்றும் இந்திய தனியார் துறையுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது போன்றவையே. தற்போது எங்கள் நாட்டு கல்வி நிறுவனங்களில் பயிலும் 90,௦௦௦000 வெளிநாட்டு மாணவர்களில் 18,000௦௦௦ சீன மாணவர்கள் இருக்கையில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கையோ வெறும் 2 ,800 ஆக மட்டுமே உள்ளது. எனவே இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும். இந்தியாவின் மீதான கவனம் மிக தாமதமாக செலுத்தப்பட்டாலும், தெளிவாகவும், விரிவாகவும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய மாணவர்கள் கனடா விசா பெறுவதில் சிக்கல் நிலவுவது உண்மையே. இந்த பிரச்சினையை தீர்க்க, நாங்கள் கனடிய குடியேற்ற அதிகாரிகள் மற்றும் இந்தியாவிலுள்ள கனடிய ஹை கமிஷன் ஆகியோரிடம் பேசி வருகிறோம். இந்த முயற்சியில் நிச்சயம் வெற்றி பெற்று, இந்திய மாணவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவோம்" என்றார். ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கனடிய பொருளாதாரத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸி. பிரச்சினைக்கு பின்னணியில் கனடாவின் ஆர்வம் அதிகரித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்