விவசாயிகளுக்கு உதவும் மாறுபட்ட மாணவர்
பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனத்தில் படித்த "அசுதோஷ் சாவன்த்&' மாறுபட்ட மாணவராக திகழ்கிறார். அவருடன் படித்த 332 மாணவர்கள் பெரிய நிறுவனங்களில் "ஏசி&' அறைகளில் "ஒயிட்காலர் ஜாப்&' களில் பணியாற்றி வருகின்றனர். சாவன்த்தோ தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவில் உள்ள காரத் தாலுகாவில் காய்கறி மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தின் மூலமாக நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு உதவி வருகிறார். விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் குறித்த தொழில்நுட்பம், ரசாயன உரங்களின் பயன்பாடு குறித்து விவரிக்கிறார். மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைகளை விவசாயிகளுக்கு விளக்குகிறார். உற்பத்தி செய்த காய்கறி மற்றும் பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பழங்களை ரசாயன முறையில் சுத்தம் செய்து, நறுக்கி துண்டுகளாக்கி பதப்படுத்தி "பேக்கிங்&' செய்து ஏற்றுமதி செய்கிறார். அல்போன்சா மாம்பழங்கள், மாதுளம் பழங்கள், "ஸ்டிராபெரி&' மற்றும் காலிபிளவர் போன்றவற்றை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறார். இவற்றிற்கு உலகளவில் நல்ல மவுசு இருப்பதாகவும் சாவன்த் தெரிவித்துள்ளார்.