காது கேளாதோருக்கான வேலைவாய்ப்பு பயிற்சிகள்
காது கேளாதவர்களுக்கான பயிற்சி மையமான, டெல்லி நொய்டாவிலுள்ள காது கேளாதோர் சொசைட்டி(என்.டி.எஸ்) நடத்தும் காதுகேளாதோருக்கான எம்.எஸ். ஆபிஸ் மற்றும் டி.டி.பி. மற்றும் கிராபிக் டிசைன் படிப்புகளை 3 வது பிரிவு மாணவர்கள் முடித்துள்ளனர். ஏற்கனவே 2 பிரிவு மாணவர்கள் அவற்றை முடித்துள்ளனர். இந்த படிப்புகளுக்கு என்.ஐ.ஐ.டி. சான்றிதழ் உண்டு. மேலும் குறியீட்டு மொழி, கீபோர்டு திறன் மற்றும் ஆங்கில மொழி போன்றவற்றிலும் படிப்புகள் வழங்கப்படுகின்றன. என்.டி.எஸ். என்பது ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனமாகும். இங்கே படித்த பலர் பரவலான வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இதைப் பற்றிய விரிவான விவரங்களை அறிய www.noidadeafsociety.net என்ற வலைத்தளம் செல்லவும்.