மருத்துவ கவுன்சில்களில் நிலுவையிலிருக்கும் புகார்கள்
மாநிலங்களின் மருத்துவ கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ குழுக்களின் மீதான மொத்தம் 301 புகார்கள் உள்ளன என்று எம்.சி.ஐ. அறிவித்துள்ளது. இந்த புகார்களில் அதிகபட்சமாக டெல்லி மெடிக்கல் கவுன்சிலில் 45 புகார்கள் நிலுவையில் உள்ளன. இதற்கடுத்து உத்திர பிரதேச மெடிக்கல் கவுன்சிலில் 41 புகார்கள் நிலுவையில் உள்ளன. இதைத்தவிர ஆந்திராவில் 14, மராட்டியத்தில் 25, மேற்குவங்கத்தில் 26, ஹரியானாவில் 17, ராஜஸ்தானில் 26, குஜராத்தில் 13 என்ற அளவில் புகார்கள் நிலுவையில் உள்ளன. கோவா மாநிலத்தில் மட்டும் ஒரே ஒரு புகார்தான் நிலுவையில் உள்ளது. உத்திரகான்ட் மாநிலத்தில் 4 புகார்கள் நிலுவையில் உள்ளன. இந்திய மெடிக்கல் கவுன்சிலானது மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வியை முறைப்படுத்தும் அதிகாரத்தை பெற்றுள்ளது. மேலும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது மற்றும் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட அதிகாரமும் இதற்கு உண்டு. இந்த கல்லூரிக்கு நாடு முழுவதிலுமிருந்தும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ துறையினர் மீது பல புகார்கள் வந்தன.