உள்ளூர் செய்திகள்

மருத்துவ கல்வியில் நன்னெறி கோட்பாடுகள்

மருத்துவ நன்னெறியும், தொழில் திறமையும்தான், மருத்துவர்களுக்கும், சமூகத்திற்குமான தொடர்பின் அடிப்படை. எனவேதான் அந்த இரு அம்சங்களையும் நடைமுறையில் ஒருங்கிணைக்க மருத்துவ பாடத்திட்டத்தில் நன்னெறி கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இளநிலை பட்டப் படிப்பிற்கான எம்.சி.ஐ. செயற்குழுவிற்கு வேலூர் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜார்ஜ் மேத்யூ தலைமை வகிக்கிறார். புதிய மருத்துவ பாடத்திட்டத்தில் நன்னெறி கோட்பாட்டை சேர்க்க அவர் மிகவும் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "விவரங்கள் தற்போது வரை இறுதிசெய்யப்பட்டு வருகிறது. மருத்துவ நன்னெறிகள், பாடத் திட்டத்தில் முறையாக அறிமுகப்படுத்தப்படும்" என்றார். மருத்துவ தொழிலில் நெறிமுறை என்பது மிக முக்கியமான விஷயம். கடந்த பல வருடங்களாக மருத்துவர்களின் நடத்தை மற்றும் தொழில் தர்மங்கள் பற்றி ஏராளமான விமர்சனங்கள் மற்றும் புகார்கள் வருகின்றன. எனவே மருத்துவ படிப்பில் நெறிமுறை கோட்பாடுகளை சேர்ப்பது பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்பட்டு, அமல்படுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்