உள்ளூர் செய்திகள்

ஹெல்த் சயின்ஸ படிப்பின் முக்கியத்துவம்

வழிகாட்டி நிகழ்ச்சியையொட்டி நடந்த கருத்தரங்கில், பிற்பகலில், ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் எனும் தலைப்பில், எஸ்.ஆர்.எம்., பல்கலை விரிவுரையாளர் சுஜாதா பேசியதாவது: ஹெல்த் சயின்ஸ படிப்புகளுக்கு, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த படிப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு மாணவர்களிடம் இருப்பதில்லை. ஹெல்த் சயின்ஸ் படிப்புகளில் பல பாடப்பிரிவுகள் உள்ளன. இதில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு, எப்போதுமே தேவை இருக்கிறது. டிபார்ம், மெடிக்கல் அண்ட் லேப் டெக்னாலஜி ஆகிய படிப்புகள் புதிதாக உருவாகியுள்ளன. இந்த படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு உடனே வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவமனை, தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி கூடங்கள், மறுவாழ்வு மையங்கள், முதியோர் மையங்கள் ஆகியவற்றில், ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதிக நேரம் பணிபுரியும் திறன், பொறுமை, தொடர்பியல் திறன் மற்றும் சிரித்த முகம் ஆகிய பண்புகளை மாணவர்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஹெல்த் சயின்ஸ் படிப்புகள் ஒவ்வொன்றிருக்கும் தனித்துவம் உள்ளது. இவ்வாறு சுஜாதா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்