நல்ல எதிர்காலம் தரும் எதிர்காலவியல்
எதிர்காலவியல் என்பது, எதிர்காலம் குறித்த முந்தைய கதைகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகின் பார்வை உள்ளிட்டவைகளை படிக்கும் துறையாகும். * மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரி, சென்னைஇக்கல்லூரியில் இத்துறையின் கீழ் 7 வருட எம்.ஏ.,படிப்பு வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 94442 05162 * தேவி அகில்யா விஸ்வவித்யாலயா, இந்தூர் இங்கு இரண்டு வருட எம்.டெக்., படிப்பு உள்ளது. www.dauniv.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம். "கேட்' மதிப்பெண்ணுடன் பி.இ.,/பி.டெக்., அல்லது எம்.எஸ்சி.,யில் இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். * காந்திகிராம ஊரக பல்கலைக்கழகம், திண்டுக்கல்.எதிர்காலவியலில் ஒருவருட எம்.பில்., படிப்பு வழங்கப்படுகிறது. மே மாதம் நேரடி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.ruraluniv.ac.in/ * கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் இத்துறையின் கீழ் ஒரு வருட எம்.பில்.,படிப்பு இப்பல்கலையில் வழங்கப்படுகிறது. முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.keralauniversity.edu