டைப்ரைட்டர் பாடப்பிரிவு கம்ப்யூட்டராக மாறுகிறது
மேல்நிலை வகுப்பு மாணவர்கள், படித்து முடித்து பணியாற்றுவதற்கு வசதியாக, கூடுதலாக டைப்ரைட்டிங் பாடப்பிரிவினை எடுத்துப் படிப்பார்கள். தற்போது எங்கும் கம்ப்யூட்டர் மயமாக உள்ளதால், டைப்ரைட்டிங் மட்டும் படிப்பது தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் இல்லை. கம்ப்யூட்டர் பயிற்சியை அளிப்பதுதான் சரியான உக்தியாக இருக்கும் என்று சி.பி.எஸ்.இ. கல்வி இயக்குநர் ஷசி பூஷன் கூறினார். இதுவரை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த டைப்ரைட்டிங் பாடப்பிரிவு, கம்ப்யூட்டர் பாடப்பிரிவாக மாற்றப்பட்டு, வரும் கல்வி ஆண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த பாடப்பிரிவு, கீ-போர்டை முறையாக இயக்குவது, வோர்ட் சா·ப்ட்வேரைப் பயன்படுத்தி கோப்புகளை உருவாக்குவது, சீரமைப்பது, டைப் செய்த கோப்பை பிழைத்திருத்துவது, பக்க வடிவமைப்பு, அட்டவணையை உருவாக்கும் விதம், ஒரு வாக்கியத்தை எடுத்து மற்றொரு இடத்தில் பதிவது (கட், காபி, பேஸ்ட்) போன்ற கம்ப்யூட்டரை இயக்கும் விதங்கள் அடங்கியதாக இருக்கும். இதில் மேலும், இணையத்தை இயக்கும் விதம், மின்னஞ்சல் அனுப்புவது, இணையத்தில் ஏதேனும் ஒரு தகவலைத் தேடுவது, மெயிலில் தேவையான இணைய முகவரிகள், மின்னஞ்சல் முகவரியை சேமித்து வைத்துப் பயன்படுத்துவது போன்றவையும் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஷசி பூஷன்.