வினா வங்கி புத்தகங்களுக்கு பிரியாவிடை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வை எளிதாக எழுதுவதற்கு வசதியாக, வினா வங்கி, தீர்வு புத்தகம் ஆகியவற்றை தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் கடந்த 10 ஆண்டுகளாக அச்சிட்டு வருகிறது. இந்த வினா வங்கி புத்தகம், மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கும் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், அடுத்த ஆண்டு சமச்சீர் கல்வி பாடத்தைத்தான் படித்து மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். எனவே, வினா வங்கி புத்தகங்களுக்கு இங்கு தேவை இருக்காது. இந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்து, அடுத்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களும், இதே சமச்சீர் பாடப்புத்தகத்தைப் படித்துத்தான் தேர்வு எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.