எஸ்.ஹெச்.சி.ஐ.எல்., நிறுவனத்தில் அதிகாரிப் பயிற்சியாளர்கள்
இந்தியாவின் நிதித்துறையில் இயங்கும் வளர்ச்சி வங்கிகளான (டெவலப்மெண்ட்பேங்க்) ஐ.டி.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., எல்.ஐ.சி., ஜி.ஐ.சி., யூ.டி.ஐ., போன்றவற்றால் இணைந்து நிர்வகிக்கப்படும் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்., நிறுவனம் 1986ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மற்றும் ஆபரேஷன்ஸ் பிரிவுகளில் அதிகாரி பயிற்சியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்புஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷனின் ஆபிசர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தகுதி அடிப்படையில் உச்ச பட்ச வயதில் சில சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதிஅறிவியல், கலை, காமர்ஸ், நிர்வாகவியல் போன்ற ஏதாவது ஒரு துறையில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் பயிற்சி அடிப்படையில் பணி புரியும் போது மாதம் ரூ.11 ஆயிரம் ஸ்டைபெண்டுடன் பணியைத் துவங்கினாலும், நிரந்தரம் செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ.2.17 லட்சம் ஊதியம் பெற வாய்ப்புகள் உள்ளது. வேறு என்ன தேவை எஸ்.ஹெச்.சி.ஐ.எல்., நிறுவனத்தின் ஆபிசர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மேற்கண்ட தகுதிகளுடன் மார்கெட்டிங் மற்றும் சிறந்த தகவல் பரிமாற்றத் திறன் கூடுதலாகத் தேவைப்படும். சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதும், கம்ப்யூட்டர் திறனும் கட்டாயத் தேவைகளாகக் குறிப்பிடப்பட்டுள் ளது. என்.சி.எப்.எம்., மாடுயூல்களை முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. விண்ணப்பிப்பது எப்படிஇந்தப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே ஸ்டாக் ஹோடிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஆபிசர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 04.04.2011