உயர்கல்வி வாய்ப்பு பெறுபவர் 12 சதவீதம்
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: பெரும்பாலான பல்கலைகழகங்களில் ரெகுலர் மற்றும் தொலைநிலைக் கல்வி படிப்புகள் இருந்தாலும், ரெகுலர் படிப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறது. ஆனால் இக்னோ பல்கலையில் தொலைநிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறது. இந்தியாவில் 20 கோடி இளைஞர்கள் உயர்கல்வி பெறுவதற்கு தகுதியுடையவர்களாக இருந்தாலும், அதில் 12 சதவீதம் பேர் மட்டும் உயர்கல்வி வாய்ப்பு பெறுகின்றனர். சில பல்கலைகளில் உயர்கல்வி அளிக்கப்பட்டாலும், பழைய பாடத்திட்டங்களாகவும், போதுமான மூலாதாரங்கள் இன்றியும் உள்ளன. தற்போதுள்ள 12 சதவீதம், இக்னோ பல்கலை மூலம் 20 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றார். இக்னோ பல்கலை மண்டல இயக்குனர் சண்முகம் பேசுகையில், மதுரை மண்டலத்தில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 1299 பேர் மதுரையில் பட்டம் பெற்றனர். மதுரை மண்டலத்தில் 11,900 பேர் பயில்கின்றனர். பி.எட். படிப்பில் 2000 பேர் கூடுதல் வாய்ப்பு பெற்றுள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 3000 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்கலையில் 360 வகையான பாடத்திட்டங்கள் உள்ளன என்றார்.